Connect with us

Cricket

‘என்னோட பேட்டிங் சீக்ரெட்டே வேற’ – உண்மையை உடைத்த ஜோஸ் பட்லர்

தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பெரிய தலைவலியாக மாறியவர் ஜோஸ் பட்லர். இவர் கடந்த ஆறு மாதம் வரை இங்கிலாந்து அணிக்கு மீண்டும் விளையாட முடியுமா? என்று எதிர்பார்த்து காத்திருந்தவர் ஆவார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் ஆடிய பின்னர் அசுர வேகத்தில் அடித்து ஆட தொடங்கினார். மீண்டும் பாமிற்கு வந்து இங்கிலாந்தின் அனைத்து அணிகளிலும் இடம் பிடித்த இடம் பிடித்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விதமான போட்டியிலும் அற்புதமாக ஆடி இங்கிலாந்து அணியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டார் ஜோஸ் பட்லர்.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முக்கியமான அங்கமாக மாறி உள்ளார். இந்த தொடரில் விராட் கோலிக்கு அடுத்து அதிக ரன் அடித்தவராகவும் உள்ளார். இவர் 8 ஆட்டத்தில் 349 ரன்கள் குவித்துள்ளார்.

இவருடைய அதிக வளர்ச்சி மற்றும் பேட்டிங்கில் சீக்ரெட் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது.

எனது மனதை முழுவதுமாக திடப்படுத்திக் கொண்டேன். எளிதான ஷாட்களை ஆட துவங்கியுள்ளேன்.ப பெரும் குழப்பம் கொள்ளாமல் அனைத்து ஆட்டத்திலும் என்னை தகவமைத்துக் கொள்ள என்னை மாற்றி உள்ளேன். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு ஆட்டத்திலும் மகிழ்ச்சியாக என்ஜாய் செய்து கொண்டு விளையாடுவது என்னுடைய பேட்டிங்கின் சீக்ரெட் ஆகும் என்று  கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See