Connect with us

Cricket

என்ன ஏன் எடுக்கலன்னு தெரியலிங்க…. வேதனையில் கேதர் ஜாதவ்!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மீதமுள்ள 3 போட்டிகளுக்கும் என்னை ஏன் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை என எனக்குத் தெரியவில்லை, அது குறித்து எனக்குச் சொல்லவும் இல்லை என்று ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் வேதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியின் போது காயம் காரணமாக கேதார் ஜாதவ் விலகினார். அதன்பின் அவர் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரா டெஸ்ட் போட்டித் தொடரில் வாய்ப்பு பெறவில்லை.

இது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் கூறியதாவது:

எனக்கு ஏற்பட்டிருந்த காயம் குணமடைந்து தியோதர் டிராபி போட்டித் தொடரில் விளையாடி வருகிறேன். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலிரு போட்டிகளில் நான் இடம் பெறவில்லை, கடைசி 3 போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனநினைத்தேன். ஆனால், ஏன் என்னைத் தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை எனத் தெரியவில்லை.வ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See