Connect with us

Tennis

‘என்ன பாத்தா அப்டி தெரியுதா’? தோல்வியின் விரக்தியில் அம்பையரிடம் சீரிய செரீனா வில்லியம்ஸ்!

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் ஏமாற்றி விளையாடியதாக அவரது புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் கோபமாக நடுவரிடம் சென்ற செரீனா வில்லியம்ஸ் அவரிடம் சீரிப்பாய்ந்து சரமாரியாக தாக்கி பேசினார். என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? என்னைப் பார்த்தால் அப்படி தெரிகிறயதா? எனவும் பலவாறு கோபமாக பேசினார் செரீனா.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை எதிர்த்து செரினா விளையாடியபோது, அவரது பயிற்சியாளர் அடிக்கடி சைகை செய்துள்ளார். இதனை கவனித்த ஆட்டத்தின் நடுவர், விதிமீறலில் ஈடுபடுவதாக செரினாவை கண்டித்தார். 

இதனால் போட்டியின் நடுவே, நடுவரை நோக்கி சென்ற செரினா ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது பயிற்சியாளர் கைகளால் வெற்றி பெறுமாறு தம்மை நோக்கி தம்ஸ் அப் மட்டுமே காட்டியதாகவும், ஏமாற்றி வெற்றி பெறுவதற்கு பதில் தாம் தோற்றுவிட்டே சென்று விடுவதாக காட்டமாக தெரிவித்தார். எனினும், அதை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த செரினா, தனது டென்னிஸ் பேட்டை ஓங்கி தரையில் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த செயல், ஆட்டத்தில் மீண்டும் விதிமீறலாக கருதப்பட்டு, செரினாவின் புள்ளி குறைக்கப்பட்டது. இதையடுத்து, போட்டியில் செரினா தோல்வியடைந்தார்.

போட்டி முடிந்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செரினா வில்லியம்ஸ், விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி தமது புள்ளிக்கணக்கை குறைத்ததன் மூலம் ஆட்டம் தமது கைகளில் இருந்து நழுவியதாக குற்றம்சாட்டினார். டென்னிஸ் உலகில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சகஜம் எனவும், தாம் பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் சமத்துவத்துக்காகவும் தான் போராடியதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவம், பெண்ணியத்துக்கு எதிராக நடந்த குற்றமாகவே கருதுவதாகவும் செரினா வில்லியம்ஸ் சாடினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See