Connect with us

Cricket

என் அறக்கட்டளை உங்களுக்கு துணை நிற்கும்: சாகித் அப்ரிடி உருக்கம்

100 வருட வரலாற்றில் இல்லாத வெள்ளம் கேரள மாநிலத்தில் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது இதனை மத்திய அரசு அதிதீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்திற்கு பல கிரிக்கெட் வீரர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நம்பிக்கை தரும் விதமாக பேசி வருவதுடன் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேரளாவிற்கு தானும் துணை நிற்பதாக கூறியுள்ளார். மேலும் தனது அறக்கட்டளை கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:-

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுக்கிறது. உங்களது கடினமான காலத்தில் உங்களை நாங்களும் ஏற்று துணை நிற்கிறோம். எங்களது சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நின்று பொராடுவோம். உங்களுக்கு கடவுள் உடனடியாக மறுவாழ்வை தருவார் என வேண்டிக் கொள்கிறேன். மனித நேயம் போற்றுவோம்

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அப்படி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See