Connect with us

Cricket

என கிரிக்கெட் வாழ்க்கையயே மாற்றியவர் இவதான்: அம்பட்டி ராயுடு புகழாரம்

இந்திய அணிக்கு மீண்டு வந்ததற்கு தோனி செய்த உதவிகள் அதிகம் என்று அம்பத்தி ராயுடு கூறினார்.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு. 32 வயதான இவர், கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய ஒரு நாள் அணியில் கடைசியாக 2016-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தார். பிறகு இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ராயுடு, கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடிய ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல முக்கியமானவராக இருந்தார். அவரது அதிரடியான பேட்டிங், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மொத்தம் 602 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 149.75 ஆக இருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அம்பத்தி ராயுடு கூறும்போது, ‘அணிக்கு மீண்டு வந்திருக்கிறேன். இதற்கு தோனி செய்த உதவிகள் அதிகம். விராத் கோலி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அவர் இல்லாதது அணிக்கு இழப்புதான். அவர் இல்லை என்றாலும் தோனி இருக்கிறார். அவர் இந்தியாவின் கேப்டன். உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில் அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை பற்றி கேட்கிறார்கள். அது பற்றி நான் இப்போது நினைக்கவில்லை.இப்போது அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See