Connect with us

Cricket

எவ்ளோ ரன் அடிக்றோம்ங்கிறது முக்கியம் இல்ல…. எத்தனை பந்துக்கு நிக்குறோம்ங்கிறது தான் முக்கியம்

வெளிநாடுகளில் ஆடும்போது எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமில்லை… எத்தனை பந்துக்கு தாக்குப் பிடிக்கும் என்பது தான் முக்கியம் என்று இந்திய வீரர் புஜாரா கூறியுள்ளார்.

முன்னதாக… இந்த போட்டியில் 208 பந்துகளுக்கு 72 ரன்னும், 31 பந்துக்கு 14 ரன்னும் அடித்திருந்தார் புஜாரா.

நேற்றைய போட்டியின் முடிவின்போது பத்திரிகையாளர்களை சந்தித்த புஜாரா பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்…

அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெளிநாடுகளில் ஆடும்போது ஒரு ஓரணியாகத் திரண்டு மொத்தமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இது குறித்து அவர் பேசியதாவது….

வெளிநாடுகளில் ஆடும்போது பெரிய பெரிய சதங்கள் அடிப்பது முக்கியமில்.லை மொத்தமாக ஒரு அணியாக சேர்ந்து ஒரு பெரிய ரன்னை சேர்ப்பதுதான் மிகவும் முக்கியம் ஒரு சில நேரங்களில் நமது துவக்க வீரர்கள் 30 முதல் 40 ரன்களுக்கு அவுட் ஆகின்றனர். அதுவே நமக்கு ஒரு பெரிய மதிப்புமிக்க ரன் ஆகும்.

சொல்லப்போனால் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் இன்று நான் விரும்புகிறேன். ஆனால் இயல்பான நிலையில் யோசித்தால் அது முடியாத காரியம். சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றி கொண்டு காலநிலைக்கேற்ப நாம் நகர வேண்டும்.

எப்போதும் நமது வீரர்களுடன் ஒட்டியே இருக்க வேண்டும். நமது திட்டங்களை வகுத்து அதனுடனே செல்ல வேண்டும். ஆனால் பெரிய பெரிய சதம் அடிப்பதை விட அதிக பந்துகள் ஒரு அணியாக நாம் தாக்குப் பிடிக்க வேண்டும். அது நமக்கு மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத் தரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறினார் புஜாரா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See