Connect with us

Cricket

ஐசிசி தரவரிசைப்பட்டியல் அறிவிப்பு: கிங் கோலியின் தலையின் மகுடம், பாண்டியா மாஸ் – பட்டியல் இங்கே

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்குப் பிறகு ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை அறிவித்து உள்ளது. இந்த பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன் கிங் கோலி தனது முதலிடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் இவர் முதலிடத்தை பிடிப்பது தற்போது இரண்டாவது முறையாக இந்த முறை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் இதுவரை அடையாத அதிகபட்ச புள்ளிகளை அடைந்துள்ளார்.

இதற்கு முன்னதாக 929 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு வந்திருந்தார். தற்போது 937 புள்ளிகளுடன் முதலிடத்தை அடைந்துள்ளார். இதுவரை எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் இவ்வளவு புள்ளிகளை டெஸ்ட் போட்டிகளில் பெற்றதில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 97 இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார் விராட். இதன் விளைவாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு அற்புதம் படைத்துள்ளார். 3வது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அதுமட்டுமில்லாமல் ஒரு அரை சதமும் அடித்திருந்தார்.

இதனால் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் 44வது இடத்தில் இருந்து அபரிவிதமாக ஒரு பெரிய குதி குதித்து 27 இடங்கள் முன்னுக்கு வந்து 17 வது இடத்தைப் பிடித்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகபட்ச ரேங்க் ஆகும்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்:-

தரம் ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
விராத் கோலி                                 இந்தியா
937
ஸ்டீவ் ஸ்மித் 929
கேன் வில்லியம்சன் 847
டேவிட் வார்னர் 820
ஜோ ரூட் 818
சேதுஷ்வர் புஜாரா 763
டிமுத் கருணாரட்ன 754
தினேஷ் சந்திமால் 733
டீன் எல்கர் 724
10  ஐடின் மார்கரம் 703

 

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்:-

பாஸ் ஆட்டக்காரர் மதிப்பீடு
ஜேம்ஸ் ஆண்டர்சன்                       இங்கிலாந்து
899
கஜிஸோ ரபாடா 882
ரவீந்திர ஜடேஜா 840
வெரோன் பிலாண்டர் 826
பாட் கம்மின்ஸ் 800
ட்ரென்ட் போல்ட் 795
ரவிச்சந்திரன் அஸ்வின் 792
ரங்கன ஹேரத் 791
நீல் வாக்னர் 765
10  ஜோஷ் ஹாஸ்லேவுட் 759

 

ஐசிசி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தர வரிசைப்பட்டியல்:-

பாஸ் ஆட்டக்காரர் மதிப்பீடு
1
ஷகிப் அல் ஹசன்                          வங்கதேசம்
420
ரவீந்திர ஜடேஜா 370
வெரோன் பிலாண்டர் 370
ரவிச்சந்திரன் அஸ்வின் 367
ஜேசன் ஹோல்டர் 354
பென் ஸ்டோக்ஸ் 333
கிறிஸ் வோக்ஸ் 263
மோயீன் அலி 248
பாட் கம்மின்ஸ் 248
10  மிட்செல் ஸ்டார்க் 247
17 * ஹார்டிக் பாண்டியா 169
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See