Connect with us

Football

ஐ.எஸ்.எல்-நீயா நானா என போட்டி போட்டு கொண்ட பெங்களூரு மற்றும் ஜாம்சட்பூர்

இந்தியன் சூப்பர் லீக் 2018 கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று பெங்களூரு மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே ஸ்ரீ கண்ட்டீவரா ஸ்டேடியம்,பெங்களூரில் நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் பாதியில் 45வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் குமார் ஒரு கோல் அடித்தார்.

விறுவிறுப்பாகநடந்து கொண்டிருந்த போட்டியில் 81வது  நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் முக்ஹீ ஒரு கோல் அடித்து சமன் செய்தார்.மீண்டும் 88வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சுனில் ஷேத்ரி வெற்றியை தம் வசமாக்கிக் கொள்ள ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப்படுத்தினார். ஆனால் சிறிதும் மனம் தளராத ஜாம்ஷெட்பூர் அணி 90+4 ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தனர். அந்த அணிக்காக சிடோன்ஷா கோல் அடித்தார். இந்தப் போட்டியானது ரசிகர்கள் அனைவரையும் பெங்களூரா! ஜாம்ஷெட்பூரா! என  விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நடந்தது. ஆட்டத்தின் முடிவில் புள்ளி பட்டியலில் ஜாம்ஷெட்பூர் 2வது இடத்திலும் பெங்களூரு அணி 4வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து கோவா அணி முதலிடத்தில் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See