Connect with us

Cricket

ஒரே ஒவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்ட 20 வயது ஆப்கன் வீரர் – வீடியோ உள்ளே

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில்காபுல் அணி சார்பாகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஹஸ்ரதுல்லா, 17 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நான்காவது ஓவரை வீசிய அப்துல்லா மஸாரியின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார் ஹஸ்ரதுல்லா. அந்த ஓவரில் ஒரு ஒயிடையும் வீசினார் அப்துல்லா. இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் 37 ரன்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவ்ராஜ் சிங், ராஸ் ஒயிட்லே ஆகியோர் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்துள்ளார்கள். இந்தச் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா.

மேலும் அவர் 12 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் டி20 போட்டியில் 12 பந்துகளில் அரை சதமெடுத்த யுவ்ராஜ், கிறிஸ் கெயிலின் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See