Connect with us

Cricket

ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் !!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் முகமது சிராஜ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையேயான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று துவங்கியது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பிறகு முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா 127 ரன்களும் லபுஸ்சக்னே 60 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய வீரர் முகமது சிராஜின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 243 ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது.

போட்டியின் துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய முகமது சிராஜ் இந்த ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமீப காலமாக இப்படி பல தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் முகமது சிராஜிற்கு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஏன் இடம் கொடுக்கவில்லை என்று பிசிசிஐ ரசிகர்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See