Connect with us

Cricket

ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரூல்சா…? தேர்வுக்குழுவை விளாசிய ஹர்பஜன் சிங்.!!

இந்திய அணியைத் தேர்வு செய்யும், எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர் வீரர்களைத் தேர்வு செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது, ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனி அளவுகோல் வைக்கிறார்கள் என்று ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தேர்வுக்குழு குறித்து கடுமையாகச் சாடினார்.

”ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் போட்டி என இரண்டுக்கும் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர் கருண் நாயர். ஆனால், அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படாமல், தொடர்ந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதென்றால், ஒரேமாதிரியான விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான அளவுகோல் பயன்படுத்தப்படுவதாக நான் அறிகிறேன். சிலருக்கு அவர்களின் திறமையை நிரூபிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சிலருக்கு ஒரே வாய்ப்பில் அவரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு நீக்கப்படுகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See