Connect with us

Asian Games

ஓடும் தடம் மாறியதால் பதக்கத்தை பறிகொடுத்த தமிழக வீரர்: மாரத்தான் ஓட்டத்தில் நேரந்த சோகம்

ஓடும் தடம் மாறியதால் பதக்கத்தை பறிகொடுத்த தமிழக வீரர்: மாரத்தான் ஓட்டத்தின் நேரந்த சோகம். ஆசிய விளையாட்டு 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தடம் மாறி ஓடியதால் வெண்கலப் பதக்கம் பறிபோனது. தடகளத்தில் அசத்திய மற்ற இந்திய நட்சத்திரங்களான ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம்), முகமது அனாஸ் (400 மீ., ஓட்டம்), டுட்டி சந்த் (100 மீ., ஓட்டம்) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.

இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீ., ஓட்டத்தின் பைனலில் தமிழக வீரர் லட்சுமண் பங்கேற்றார். இவர், பந்தய துாரத்தை 29 நிமிடம் 44.91 வினாடியில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தார். பின்னர் இவர் தடம் மாறி ஓடியது தெரியவர வெண்கலப் பதக்கத்தை பரிதாபமாக பறிகொடுத்தார். இதனையடுத்து நான்காவது இடம் பிடித்த சீனாவின் சான் ஹாங்கிற்கு வெண்கலம் வழங்கப்பட்டது. தங்கம், வெள்ளி முறையே பக்ரைனின் ஹசன் (28:35.54 நிமிடம்), ஆப்ரஹாம் (29:00.29) கைப்பற்றினர்.வ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See