Connect with us

Cricket

ஓய்வு பெற்ற அலெஸ்டர் குக் புதிய அணியில் இணைந்தார்!

இங்கிலாந்து அணிக்காக கடந்த 12 வருடங்களாக அற்புதமாக ஆடியவர் குக். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அவர் படைத்த சாதனைகள் ஏராளம். இங்கிலாந்து அணிக்காக 10000 ரன்கள் அடித்த ஒரே ஒரு வீரர் இவர் மட்டுமே.

மேலும், அந்த அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியவர் இவர் மட்டுமே. இவர் தற்போது தனது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் ஆட மாட்டேன் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் சிறுவயதில் இருந்து ஆடிவந்த இங்கிலாந்தின் கவுண்டி அணியான எசெக்சில் இணைந்துள்ளார்.

தனது 12 வயதில் இருந்து அந்த கவுண்டி அணிதான் தனக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக கூறுகிறார் குக். இதனால் மீதமிருக்கும் கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த கவுண்டி அணிக்காக தன்னால் முடிந்ததை செய்வேன் எனவும் இதற்காக அந்த அணியுடன் ஒப்பந்தம் போட்டு இணைந்துள்ளதாகவும் கூறியுள்ளார் குக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See