Connect with us

Cricket

கடைசி ஆட்டத்தில் சதமடித்த குக், 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்த இந்திய அணி: நேற்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வீடியோ!!

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 58 ரன்களுக்கு அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தோல்வியை தவிற்க போராடி வருகிறது.

12.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து 463 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவிற்கு 464 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜடேஜா, விஹாரி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக இருந்தது. ஆண்டர்சன் வீசிய இரண்டாவது ஓவரில் தவான் ஒரு ரன்னிலும், புஜாரா ரன் ஏதும் அடிக்காமலும் எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

அடுத்து பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே களமிறங்கிய விராட் கோலி பிராட் வீசிய 3-வது ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See