Connect with us

Cricket

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு? 18 வயது பேட்ஸ்மேன் அணியில்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே அணி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அணி இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து வந்த செய்திகளின் படி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் மும்பை அணியின் பேட்ஸ்மேன் 18 வயதான பிரித்திவ் ஷா மற்றும் ஆந்திர அணியின் கேப்டன் ஹனுமா விஹாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கியமான ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளை பொருத்த வரையில் இந்தியாவின் பேட்டிங் மட்டுமே சற்று சுற்றிவிட்டுவருகிறது. பந்துவீச்சில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதனால் பேட்டிங்கில் இந்திய அணியை வலுப்படுத்த முக்கியமான இந்த இரண்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் மயாங்க் அகர்வால் இடம் பிடிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் கடந்த இரண்டு வருடமாக உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தது அவர் மட்டுமே.

இந்திய ஏ அணி களுக்காக பிரித்திவ் ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் அபாரமாக ஆடினர். மேலும் இந்தியாவின் டாப் ஆர்டரில் சொதப்பலாக சுற்றிக் கொண்டிருப்பதால் பிரித்திவ் ஷா ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நம்பலாம். அதேபோல் மிடில் ஆர்டரில் ஆட ஹனுமா விஹாரிதேர்வு செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம் இந்திய அணி இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரையில்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See