Connect with us

Cricket

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 

இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில்  இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்.,7ம் தேதி லண்டனின் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் ஜேம்ஸ் வீன்ஸ் நீக்கப்பட்டு, கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஓலி போப் ஆகியோர் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி;

ஜோ ரூட், மொய்ன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பாரிஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர், அலெய்ஸ்டர் குக், சாம் குர்ரான், கீட்டன் ஜென்னிங்ஸ், ஓலி போப், அடில் ரசீத், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See