Connect with us

Cricket

கடைசி 25 ரன்களுக்கு 5 விக்கெட்!! இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணியினர் ஆட்டநேர முடிவில் 307 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்தனர்.

இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் மழையால் அரைமணி நேரம் தடைபட்டது பின்னர் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி பெரிதாக ஏதும் சமாளிக்க முடியவில்லை.

ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தங்களது அற்புதமான பந்துவீச்சின் மூலம் இந்தியாவின் கடைசி 4 விக்கெட்டுகளை எடுத்து தட்டில் அரிசி தவிடு பொடியாக்கினர்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கடைசியாக 25 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி தனது ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது இதனால் பெரும் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

விராட் – 97
ரகானே – 81
சிகர் தவான் – 35

ஆண்டர்சன் – 3 விக்கெட்டுகள்
பிராட் – 3 விக்கெட்டுகள்
வோக்ஸ் –  3 விக்கெட்டுகள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See