Connect with us

Kabaddi

கபடியில் 600 புள்ளிகளை குவித்த தமிழ் தலைவாஸ் அஜய் தகூர்!!

அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். அவர் 87 ஆட்டத்தில் 609 ரைடு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் சவுத்ரி 700 புள்ளிகளும், பர்தீப் நர்வால் 671 புள்ளிகளும் ரைடு மூலம் எடுத்தனர்.ஒட்டு மொத்தமாக டேக்கிள் பாயண்டையும் சேர்த்து 630 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் ரைடு மூலம் 81 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

தமிழ்தலைவாஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 3-வது இடத்தில் இருக்கிறது.அந்த அணி 8-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்சுடன் வருகிற 26-ந்தேதி மோதுகிறது.இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலாஸ் (இரவு 8 மணி), புனேரி பில்டான்- உ.பி.யோதா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See