Connect with us

Cricket

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் ஜுலன் கோஸ்வாமி!!

இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் ஜாம்பவானான ஜுலன் கோஸ்வாமிசர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் இதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடுவதாகவும் கூறியுள்ளார்

தற்போது 30 வயசு வயதான ஜுலன் கோஸ்வாமி 68 டி20 போட்டிகளில் ஆடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் எக்கனாமி 5.45 மட்டுமே ஆகும் . மேலும் 169 ஒருநாள் போட்டிகளில் ஆடி 200 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.இதனை தொடர்ந்து தற்போது டி20  போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அவர் அனுப்பியுள்ள செய்தியாவது….

என்னுடைய சக வீரர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினையும் நான் பாராட்டுகிறேன். மேலும், அவர்களுக்கு நன்றியும் கூறிக் கொள்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவர்கள் பெரும் மாற்றத்தையும், வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். மேலும் ஒரரு வீராங்கனை உருவாக நான் ஒரு இடத்தை அவர்களுகுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

தற்போது மகளிர் கிரிக்கெட் அணியில் ஆடும் வீராங்கனைகளில் மிகவும் அனுபவமிக்க வீராங்கனை இவராவார். கடந்த 2002ஆம் ஆண்டு தனது அறிமுக போட்டியில் ஆடிய அவர் 16 வருடம் இந்திய அணிக்காக ஆடி உள்ளார். மிகப்பெரும் அனுபவம் மிக்கவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடுவார் என்று கூறியுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See