Connect with us

Cricket

குக்கின் கடைசி டெஸ்ட் போட்டியில் தொப்பியை கழற்றி மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்: வீடியோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30க்கு தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கிற்கு ஒரு உணர்ச்சிகரமான போட்டியாகும். ஏனெனில் 12 வருடங்களாக 168 டெஸ்ட் போட்டியில் ஆடிய அவர் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறும் ஒரு வீரருக்கு அந்த அணி வீரர்களே மரியாதை செய்வது வழக்கம். ஆனால் இன்றைய டெஸ்ட் போட்டியில் அதற்கு நேர் மாறாக இந்திய வீரர்கள் வரிசையாக நின்று குக்கிற்கு தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See