Connect with us

Cricket

குக் இல்லாமல் களமிறங்கும் இங்கிலாந்து..! காரணம் என்ன தெரியுமா..?

இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் அலெய்ஸ்டர் குக் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் வெற்றியை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 30ம் தேதி துவங்க உள்ள இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் அலெய்ஸ்டர் குக் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக்கின் மனைவிக்கு அடுத்த வாரம் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் நான்காவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See