Connect with us

Cricket

குறைந்த போட்டிகளில் அதிக சதம்: டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார் சிகர் தவான்

ஹாங்காங் அணியுடனான நேற்றைய போட்டியில்ல் சதம் அடித்த இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 127 ரன்கள் எடுத்தன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மிக குறைந்த போட்டிகளில் தனது 14வது சதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் அரங்கில் மிக குறைந்த போட்டிகளில் தங்களது 14வது சதத்தை பூர்த்தி செய்த வீரர்கள் பட்டியல்;

  1. ஹசீம் அம்லா – 84 போட்டிகள்வ்
  2. டேவிட் வார்னர் – 98 போட்டிகள்வ்
  3. விராட் கோஹ்லி – 103 போட்டிகள்
  4. ஷிகர் தவான் – 105 போட்டிகள்
  5. டிவில்லியர்ஸ் – 131 போட்டிகள்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See