Connect with us

Cricket

கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் சில வாரங்களுக்கு முன்பு தான் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஆனார்.

அவர் கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும், உதவிக்கரம் நீட்ட எப்போதும் தயார் என்றும் கூறியுள்ளார்.

அவர் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,
“பாகிஸ்தான் மக்களின் சார்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மக்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See