Connect with us

Cricket

கேரளா வெள்ள நிவாரண நிதியாக ரூ. 15 லட்சம் வழங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்; யார் அவர்..?

கேரளாவில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருதால் கேரளாவின் பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடி தாண்டவம் ஆடி வருகிறது.

வரலாறு காணாத மழையால் கேரளா மக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலர் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.

மத்திய அரசு, மாநில அரசுகள் நிவாரண நிதியை அறிவித்து வழங்கி வரும் நிலையில், அரசியல், திரை பிரபலங்கள் என பலரும் வெள்ள நிவாரணத்திற்காக நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக கேரளாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ரூ. 15 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See