Connect with us

Cricket

கோலிக்கு குட்பை!! பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் – ஓய்வுபெற்ற அதிரடி வீரர் கேப்டனாக நியமனம்?

அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபில்) தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சில முக்கியமான மாற்றங்களை செய்து வருகிறது. இதற்கு முன்பு தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை நீக்கி, கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது. மேலும், கடந்த வருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து ஆஷிஷ் நெஹ்ராவை தக்கவைத்து கொண்டது.

எனினும், பெங்களூரு அணி மேலும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பெங்களூரு அணியின் முதுகெலும்பாக இருந்த விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஏபி டி வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மீண்டும் ஒரு முறை மோசமான சீசனை சந்தித்ததால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்கப்போவதாக சில தகவல்கள் வந்தன.

அது போக, தென்னாபிரிக்கா அணியின் ஏபி டி வில்லியர்ஸும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அடுத்த சீசன் முழுவதும் இருப்பார் என்பதால் அவரை கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்கள். 2013ஆம் ஆண்டில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி, இது வரை ஒரு முறை கூட ஐபில் கோப்பையை வென்றதில்லை.

2018ஆம் ஆண்டு நடந்த ஐபில் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால், கடைசி லீக் போட்டியில் தோல்வியை கண்டதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அடுத்த வருடம் ஐபில் தொடருக்கு ஏபி டி வில்லியர்ஸை கேப்டனாக அறிவித்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அவர் கோப்பையை வாங்கி தருவாரா என்பது ஒரு கேள்வி குறியாகவே இருக்கும்.

ஆனால், ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டி வில்லியர்ஸ், அடுத்த வருடம் ஐபில் தொடரில் பிரெஷாக இருப்பார். மேலும், அடுத்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) தொடரில் கலந்து கொள்ள போவதாக ஏபி டி வில்லியர்ஸ் உறுதிப்படுத்திவிட்டார்.

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த வருட ஐபில் தொடரின் போது அட்டகாசமான பார்மில் இருந்தார். பெங்களூரு அணிக்காக சில முக்கியமான இன்னிங்க்ஸை விளையாடிய டி வில்லியர்ஸ், அட்டகாசமாக ஒரே கையில் கேட்சை  பிடித்தும் அசத்தினார்.

ஆனால், ஐபில் தொடர் முடிந்ததும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்குள் ஆக்கினார். மேலும், ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்லாத டி வில்லியர்ஸ், 2019 உலகக்கோப்பை தொடங்க ஒரே ஒரு வருடம் இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See