Connect with us

Cricket

கோவையை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது டூட்டி பேட்ரியாட்ஸ் !!

கோவையை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது டூட்டி பேட்ரியாட்ஸ்

டி.என்.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டூட்டி பேட்ரியாட்ஸ் அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் கோவை அணியும் மோதின.

திண்டுக்கல் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய டுட்டி பேட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கௌசிக் காந்தி மற்றும் தினேஷ் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய கௌசிக் 43 ரன்களிலும் தினேஷ் 59 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

அதன்பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்களை இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது.


இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியினர், ஒருபுறம் அதிரடியாக ஆடினாலும் மற்றொரு புறம் விக்கெட்களை சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. இதனால், கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்களை குவித்தது. இதனால், டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See