Connect with us

Cricket

கோஹ்லியை விட இவர் தான் பெஸ்ட்; ரோஹித் சர்மா ஓபன் டாக் !!

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான டிவில்லியர்ஸ் தான் இந்த தலைமுறையில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் ரோஹித் சர்மாவிடம் கேள்விகள் கேட்டு வருகின்றனர். சில முக்கியமான கேள்விகளுக்கு ரோஹித் சர்மாவும் பதில் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவிடம், இந்த தலைமுறையில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வியை கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, “தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் தான் தனக்கு பிடித்த வீரர்” என்று பதிலளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See