Connect with us

Cricket

சச்சினின் ‘100 செஞ்சுரி’ சாதனையை இவர் முறியடிப்பார்: சேவாக் கணிப்பு

கிரிக்கெட் உலகில் முறியடிக்கப்பட முடியாத சாதனைகள் சில உள்ளன. அவற்றில் ஒரு சாதனை சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறு சதம் என்ற சாதனை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 100 சதங்கள் அடித்துள்ளார்.

100 சதம் என்பது மலைக்க வைக்கும் விதமாக இருக்கிறது. இந்த சாதனையை இனிமேல் யாரும் செய்யப்போவதில்லை என்ற அளவிற்கு பேச்சுக்களில் எடுபட்டு வந்த நிலையில் தற்போது விராட் கோலி அதனை நெருங்கி வருகிறார்.

29 வயதான விராட் கோலி தனது பத்து வருட காலத்தில் 58 சதங்கள் அடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 58 சதம் ஏனெனில் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இதுகுறித்து முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறியதாவது…..

விராட் கோலிக்கு ரன் அடிக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. அதனை விட அதிகமாக அதிக திறமையும் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரருக்கு எப்போதும் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறு சதம் என்ற சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கும்.Sachin Tendulkar mentor of the Mumbai Indians and Virat Kohli captain of the Royal Challengers Bangalore during the toss of the match fourteen of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Mumbai Indians and the Royal Challengers Bangalore held at the Wankhede Stadium in Mumbai on the 17th April 2018. Photo by: Vipin Pawar / IPL/ SPORTZPICS

அவர் இந்த சாதனையை முறியடிப்பார் என நான் நம்புகிறேன். இன்னும் வரும் வருடங்களில் அவர் எப்படி தன்னை கொண்டு போகிறா,ர் எப்படி தன் ஆட்டத்தை மாற்றுகிறார் என்பதை பொறுத்தே உள்ளது.

என்று புகழாரம் சூட்டினார் விரேந்தர் சேவாக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See