Connect with us

Cricket

சச்சின் சாதனைகள் எஸ்கேப்; குக்கிற்கு நன்றி சொல்லும் இந்திய ரசிகர்கள் !!

நிகழ்கால கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான இங்கிலாந்து அணியின் அலெய்ஸ்டர் குக் திடீரென தனது ஒய்வு முடிவை அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் மிக முக்கிய வீரருமான அலெய்ஸ்டர் குக் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்திருந்தாலும், சமீப காலமாக மோசமான பார்மில் உள்ளார்.

இந்திய அணியுடனான நடப்பு தொடரிலும் பெரிதாக சோபிக்காத அலெய்ஸ்டர் குக், தானாக முன்வந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருத்து கடந்த சில தினங்களாக வலுத்து வந்த நிலையில் குக் திடீரென இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகவும் குக் தெரிவித்துள்ளார்.

அலெய்ஸ்டர் குக்கின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதையும் கிண்டல் செய்து பழக்கப்பட்ட சில ரசிகர்கள் சாதனைகள் சிலவற்றையாவது மிச்சம் வைத்துவிட்டு ஓய்வு பெறுவதற்கு குக்கிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/fakingnews/status/1036575709970358274

இது தவிர முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கல் மற்றும் கிரிக்கெட் விமர்ச்சகர்கள் என பலரும் குக்கிற்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதில் சில;

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See