Connect with us

Cricket

சதத்தில் துவங்கி சதத்துடனே விடை பெறும் அலெய்ஸ்டர் குக் !!

இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள அலெஸ்டர் குக், சதத்துடனே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெற உள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இது  அலெய்ஸ்டர் குக்கிற்கு கடைசி போட்டியாகும், இந்த போட்டியுடன குக் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 292 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து, 154 ரன்கள் முன்னிலை பெற்றது. குக் (46), ரூட் (29) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு, குக் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி வலுவான நிலையை நோக்கி செல்கிறது.

இந்நிலையில் டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் குக் ஐந்தாவது வீரராக இணைந்தார். தவிர, டெஸ்ட் அரங்கில் தனது 33வது சதத்தை குக் பூர்த்தி செய்தார்.

தவிர, டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற வரலாறு படைத்தார்.

டெஸ்ட் அரங்கில் முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதம் விளாசிய வீரர்கள்

வீரர் முதல் டெஸ்ட் கடைசி டெஸ்ட் 
பான்ஸ்போர்டு (ஆஸ்திரேலியா) 110 & 27 – 266 & 22
டப் (ஆஸ்திரேலியா) 32 & 104 – 146 & –
சாப்பல் (ஆஸ்திரேலியா) 108 & – 182 & –
அசாருதீன் (இந்தியா) 110 & – 9 & 102
குக் (இங்கிலாந்து) 60 & 104 – 71 & 103*

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See