Connect with us

Cricket

சதம் அடித்து மாஸ் காட்டிய கே.எல் ராகுல்; கொண்டாடும் கிரிக்கெட் உலகம் !! 

இங்கிலாந்து அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ள கே.எல் ராகுலிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணிக்கு 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக ஷிகர் தவான் 1 ரன்னிலும், கோஹ்லி மற்றும் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடி வரும் கே.எல் ராகுல் சதம் அடித்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றி வருகிறார்.

கடந்த போட்டிகளில் கே.எல் ராகுல் சொதப்பி இருந்தாலும் இந்த போட்டியில் இவரின் இந்த பொறுப்பான ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அதில் சில;

https://twitter.com/Kohlicious_/status/1039483460119740416

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See