Connect with us

Cricket

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆர்.பி சிங் !!

சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆர்.பி சிங் குட் பை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆர்.பி. சிங் இன்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி சிங், கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி இந்திய அணிக்கு அறிமுகமானார்.

இந்திய அணிக்காக இதுவரை 14 டெஸ்ட் போட்டிகள், 58 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்.பி சிங், அதில் 40 (டெஸ்ட்), 69 (ஒருநாள்), மற்றும் 12 (டி.20) விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் நீண்ட காலமாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த ஆர்.பி சிங் இன்றுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  இருந்து ஓய்வு பெறுவதாக தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள ஆர்.பி சிங், அதில் நீண்ட கட்டுரை ஒன்றையும் உருக்கமாக எழுதி மிகுந்த மன வேதனையுடன் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See