Connect with us

Cricket

சற்று முன்: ஒய்வு குறித்து அறிவுத்தார் கவுதம் கம்பிர்!!

37 வயதான கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ஓய்வு பெறுவது எப்போது, அதற்கு முன்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்து இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து கம்பீர் கூறியதாவது:-

குறிப்பிட்ட இலக்கு என்பது எல்லாம் இல்லை. இப்போது வரைக்கும் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுகிறேன். அது தான் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ரன்கள் குவிப்பது, வெற்றி பெற வைப்பது, வீரர்கள் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பது இவை தான் என்னை உற்சாகப்படுத்தும்.

இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்.

உங்களது பயணத்தில் ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நீங்கள் ஏதாவது ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முடிவே கிடையாது. விரும்பிய இலக்கை அடைந்து விட்டேன் என்று உணரும் போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.இவ்வாறு கம்பீர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See