Connect with us

Cricket

சாதனை மேல் சாதனை படைக்கும் கோலி: விவரம் உள்ளே!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எப்படியும் 550 ரன்கள் எடுக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இன்றைய ஆட்டம் தொடங்கியது. நேற்று புஜாரா – பிருத்வி ஷா ஜோடி மே.இ. அணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேறியதுபோல கோலி – பந்த் ஜோடியும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தியது.

பந்துகளை வீணடிக்காமல் ரன்களைக் குவித்து வந்த பந்த், சிக்ஸர் அடித்து 57 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து மூன்று ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து வந்திருந்த சிறு ரசிகர் கூட்டத்தை உற்சாகமூட்டினார். ரன் அடிப்பதே தெரியாதது போல கவனமாக ரன்கள் சேர்த்த கோலி, 184 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 24-வது டெஸ்ட் சதமாகும். கேப்டனாக இது அவருடைய 17-வது சதம்

இதன் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு(2016,17,18) 1000+ டெஸ்ட் ரன்கள் அடித்த்துள்ளா ஒரே இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See