Connect with us

Cricket

சானியா மிர்சாவைடம் தவறாக நடந்துகொன வங்கதேச வீரர்: கணவர் சோயப் மாலிக் புகார்

வங்கதேச வீரர்களுக்கு ஏதாவது ஒன்று சரியாக செய்து வருவதை வாடிக்கையாக போய்விட்டது. தற்போது அப்படி ஒரு சர்ச்சை மீண்டும் வெளிவந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சர்வதேச டென்னிஸ் டென்னிஸ் அரங்கில் ஜொலித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார் சானியா மிர்சா.

செய்தி என்னவென்றால் கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் அந்த நாட்டு டி20 லீக் தொடரில் ஆட சோயப் மாலிக் சென்றிருந்தார். அவருடன் சேர்த்து அவரது மனைவியையும் அழைத்து சென்றுள்ளார் மாலிக்.

இந்த நிலையில் அவர் ஆடிய அணியிலிருந்த வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் மாலிக்கின் மனைவி சானியா மிர்சாவை ஈவ்டீசிங் செய்துள்ளார். மேலும் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக செய்திகள் வந்துள்ளது. இந்த இந்த அநாகரிக செயல் குறித்து தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார் சோய்ப் மாலிக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See