Connect with us

Cricket

சிகர் தவானின் சாதனையை முறியடித்த பாக் வீரர் பாபர் அசாம்!!

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் குறைந்த இன்னிங்சில் 2000-ம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  இதற்கு முன்னர் இந்திய வீரர் சிகர் தவான் 48 போட்டிகளில் 2000 ரன் அடித்திருந்தார். தற்போது 45 ஆட்டட்தில் 2000 ரன் அடித்ததன் மூலம் சிகர் தவானின் சாதனையை முறியடித்துள்ளார் பாபர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஹாங் காங் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹாங் காங் 116 ரன்னில் சுருண்டது. பின்னர் சேஸிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் ஆசம் 33 ரன்கள் சேர்த்தார். அவர் 27 ரன்களை தொடும்போது ஒருநாள் போட்டியில் 2000-ம் ரன்களை தொட்டார். இந்த ரன்களை எடுக்க 47 ஒருநாள் போட்டியில் 45 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது.

இதன்மூலம் விரைவாக இரண்டாயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 40 இன்னிங்சில் இரண்டாயிரம் ரன்கள் கடந்து முதல் இடத்தில் உள்ளாவ்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See