Connect with us

Hockey

சிங்குகள் அபாரம் – நியுஸிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

இந்தியா – நியூசிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-1 என வெற்றி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் காலிறுதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியா இரண்டு கோல்களும், நியூசிலாந்து ஒரு கோலும் அடித்தது. இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.

18-வது நிமிடத்தில் ருபிந்தர் பால் சிங்கும், 27-வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் சிங்கும் கோல் அடித்தனர். 24-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஜென்னெஸ் கோல் அடித்தார். 56-வது நிமிடத்தில் மந்தீப் சிங் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-1 என வெற்றி பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See