Connect with us

Tennis

சின்சினாட்டி ஓபன்: சிலிச்சை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்த ஜோகோவிச்!!

அமெரிக்காவில் தற்போது நடந்துவரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், குரோசியாவின் சிலிச்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டி நடு கோர்ட்டில் துவங்கியது. இதில் முதல் செட்டில் ஜோகோவிச் சிறப்பாக ஆடி 6-4 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சிலிச் 6-3 என கைப்பற்ற, மூன்றாவது மற்றும் இறுதி செட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை செர்பியா நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 6-3 என எளிதாக கைப்பற்றி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடக்க இருக்கும் இரண்டாவது அரையிறுதியில் கோபின் மற்றும் பெடெரர் மோதுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See