Connect with us

Cricket

சேட்டை செய்த சபீர் ரஹ்மான்: 6 மாதம் தடை செய்த கிரிக்கெட் வாரியம்

வங்கதேச அணி வளர்ந்து வருகிறதோ இல்லையோ, சேட்டைகள் செய்வதிலும் சர்ச்சைகளில் சிக்குவதிலும் வங்கதேச வீரர்கள் நன்கு வளர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வரும்  வீரர்கள் அந்த நாட்டில் பலர் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு வீரர் மாட்டினார், அதன் பின்னர் மைதானத்தில் தேவையில்லாத அசிங்கமான செயல் செய்து ஒரு வீரர் மாட்டினார், அதன் பின்னர் போட்டியை வெல்வதற்கு முன்னரே பாம்பு டான்ஸ் ஆடி மோசமான செயலை செய்தனர், அதன் பின்னர் இந்திய அணி தோற்றால்தான் நான் நிம்மதியாக தூங்குவேன்  என்று கூறி ஒரு ட்வீட் செய்தார் ஒரு வீரர்.

தற்போது அந்த வரிசையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செய்த ஒரு மோசமான செயலால் இணைந்துள்ளார் சபீர் ரஹ்மான். சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு ரசிகரை தாக்குதல் செய்யும் விதமாக மிரட்டியதற்காக தற்போது அவரை ஆறுமாதம் கிரிக்கெட் விளையாட தடை செய்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த ரசிகர் சபிர் ரஹ்மானை விமர்சித்துள்ளார். இது பொறுக்காத சபிர் அந்த ரசிகரை தாக்குதல் நடத்தும் விதமாக பேசியுள்ளார். இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு சென்றது.

இதனை விசாரித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம், சபிர் ரஹ்மான் எனது அக்கௌன்ட்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று அடித்து விட்டுள்ளார். இதனை ஏற்காத கிரிக்கெட் வாரியம்… அவர் சொல்லும் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. அதனால் நாங்கள் அவரை ஆறுமாதம் கிரிக்கெட் விளையாட தடை செய்கிறோம்.

மேலும் வங்கதேச மதிப்பில் 10 லட்சம் அபராதம் விதிக்கவும் என்று தீர்ப்பளித்தனர். ரஹ்மான் சர்ச்சையில் சிக்க, புதியவரல்ல. இதற்கு முன்னர் இளம் வீரர் மெஹதி ஹசனை மைதானத்திலேயே அடித்துள்ளார். மேலும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது ஒரு ரசிகரை வேண்டுமென்றே தாக்குதல் நடத்த அவரை துரத்தியுள்ளார். ஆனால் வங்கதேச வீரர்கள் இதுவே பொழப்பா போச்சு என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See