Connect with us

Cricket

ஜடேஜாவின் வால்வீச்சு, ஷமி செய்த அற்புதமான இன்-ஸ்விங்கர் போல்ட் – நேற்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸ் வீடியோ

ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 114 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து இந்தியாவை விட 154 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

அறிமுக போட்டியிலேயே ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்தியா 40 ரன்கள் பின்தங்கியது.

இந்நிலையில், மூன்றாம் நாள் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களுக்கு இங்கிலாந்து 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் குவித்துள்ளது. குக் 46 ரன்கள் மற்றும் ரூட் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவை விட இங்கிலாந்து 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

India’s Ravindra Jadeja celebrates after reaching his fifty during play on the third day of the fifth Test cricket match between England and India at The Oval in London on September 9, 2018. (Photo by Adrian DENNIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See