Connect with us

Tennis

ஜஸ்ட் மிஸ்.. நடாலை வீட்டுக்கு அனுப்பிருப்பாங்க..!! தப்பிச்சு.. அரையிறுதியில் நுழைந்தார் நடால்!!

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதி போட்டியில் நம்பர் 1 வீரர் நடால் மற்றும் நம்பர் 4 வீரர் டோமினிக் தியெம் இருவரும் மோதின.

முதல் செட்டில் நம்பர் 1 வீரர் நடால் 0-6 என படு மோசமாக தோற்றப்பிறகு, ஆட்டம் ஒரு பக்கமாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டு வந்து இரண்டாவது செட்டை நடால் 6-4 என கைப்பற்றி ரசிகர்கள் நெஞ்சில் இருந்த பதட்டத்திற்க்கு சற்று ஆறுதல் தந்தார்.

இதனையடுத்து, மூன்றாவது செட்டை நடால் 7-5 என நடால் கைப்பற்ற தியெம் சற்று  நிலைகுலைந்து போனார். ஆனால் நான்காவது செட்டை தியெம் 7-6 (7-4) என கைப்பற்றி 2-2 கணக்கில் சமன் செய்தார்.

தீர்மானிக்கும் செட்டில் (5வது மற்றும் இறுதி செட்டில்) இருவரும் சமமாக சென்றுகொண்டிருந்த நிலையில் நடால் 7-6 (7-5) என கைப்பற்றி மயிரிழையில் தப்பித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.

இவர் அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் டெல் பெட்ரோவை எதிர்கொள்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See