Connect with us

Cricket

ஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னால் இந்திய வீரர் நியமனம்!

ஜிம்பாப்வே அணியின் முழுநேர பயிற்சியாளராக இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இரண்டு முறை அந்த அணிக்கு பயிற்சியாளராக வேலை செய்துள்ளார். மேலும், பல கத்துக்குட்டி அணிகளை கற்றுத் தேற வைத்து முன்னேற்றிய பெருமை இவருக்கு உண்டு

 

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் மேனேஜராக இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு.

அதேபோல், லால்சந்த் பயிற்சியின் கீழ்தான், ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அந்த அணி 6 தொடர்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் அணியின் பயிற்சியாளராகவும் லான்சந்த் பதவி வகித்தார்.

இது குறித்து தெரிவித்த லால்சந்த் என் பயிற்சியின் மீது நம்பிக்கை வைத்த ஜிம்பவே அணி தேர்வு குழுவுக்கு நன்றி எனது பணியை சிறப்பாக தொடருவேன்.அணியின் பயிற்சியளராக 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See