Connect with us

Football

ஜுவென்டசில் இருந்து தாவப் போகிறார் ரொனால்டோ?

ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ (33) கடந்த கோடைக்காலத்தில் 115 மில்லியன் டாலர்களுக்கு ஜுவென்டஸ் அணியில் இணைந்தார். இதற்கிடைய ஸ்பெயின் லீக் போட்டியான லா லிகாவில் ரியல் மாட்ரிட் 3 தோல்விகள், 1 டிராவுடன் நான்காம் இடத்திலேயே உள்ளது.
இந்நிலையில் ஜுவென்டஸ் அணி ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் இத்தாலி சீரி ஏ லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டு இயக்குநர் பராட்டிசி கூறியுள்ளதாவது:
எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத் தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.
இதற்கிடையே ஜுவென்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக் கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வர வாய்ப்பில்லை என்றார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See