Connect with us

Football

ஜுவென்டஸ் மக்களின் கரகோஷம் தான் என்னை அந்த அணியில் சேர வைத்தது – ரொனால்டோ பேச்சு!!

கடந்த மாதம் கால்பந்து உலகில் பரபரப்பாக பேசப்பட்டது போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ரியல் மாட்ரிட் கிளப் விட்டு இத்தாலி நாட்டின் முன்னணி கிளப் ஆன ஜுவென்டஸ் அணிக்கு சென்றது தான்.

இவர் ஜுவென்டஸ் அணிக்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் 112 மில்லியன் யூரோ அளவிற்கு எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், தான் எப்படி ஜுவென்டஸ் அணிக்கு சேர முன்வந்தேன் என்பதை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சாம்பியன்ஷிப் லீக் போட்டிக்காக ஜுவென்டஸ் அணியுடன் ஆடிய போட்டியில் ரொனால்டோ பைசைக்கிள் கிக் ஒன்றை நிகழ்த்தினார்.

TOPSHOT-FBL-EUR-C1-JUVENTUS-REAL MADRID

எதிரணி வீரராக இருந்தாலும், இவரின் கோல் கண்டு மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர். இந்த நிகழ்வு தான் ரொனால்டோவை ஜுவென்டஸ் அணியில் இணைய தூண்டுதலாக இருந்ததாக கூறினார்.

அவர் கூறியதாவது,

“சிறிய மாற்றம் நாள் முடிவில் பெரிய வித்தியாசம் கொடுக்கும்… நீங்கள் அந்த மைதானத்தில் நிகழ்ந்த செயலுக்கு (கோலுக்கு பிறகு மக்களின் கரகோஷம்) தான் நன்றி கூறவேண்டும்,” என ரொனால்டோ கூறிவிட்டு, “100 சதவீதம் அது உதவவில்லை என்றாலும், நான் முடிவெடுக்க அது உதவியாக இருந்தது” என்றார்.

“இதுவரை என் வாழ்க்கையின் மிகச் சிறந்த கோல்களில் ஒன்று இது. மேலும், மக்கள் எனக்காக எழுந்து வாழ்த்தும்போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் இப்படி என் வாழ்க்கையில் நடந்ததில்லை, அது ஒரு நம்பமுடியாத தருணம்.” என மனமுருக பேசினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See