Connect with us

Cricket

ஜோ ரூட்டை நீக்குங்கள்… இவரை கேப்டனாக நியமியுங்க: ஷேன் வார்ன் ஆவேசம்!

ஜோ ரூட் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக அவரை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

ஜோ பட்லர் சிறந்த கேப்டனாக முடியும். அவருடன் நான் பணியாற்றியதை வைத்து கூறுகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

இங்கிலாந்து அணி ஜோ ரூட் அசைக்க முடியாத தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது. ஜோஸ் பட்லர் போன்ற ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See