Connect with us

Cricket

டிராவிட் சாதனையை இவர் முறியடிப்பார் சேவாக்: ஆருடம்

இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் அடித்த அதிக ரன் சாதனையை தற்போது விராட் கோலி முறியடிப்பார் என்று ஷேவாக் கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிப்பதில்லை. எப்போதாவது சதமும் எப்போதாவது அரைசதம் அடிக்கின்றனர்.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 440 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மீதம் இருக்கையில் கிட்டத்தட்ட குறைந்தது 200 ரன்களாவது அடிப்பார் என்று தெரிகிறது.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் 1990ஆம் ஆண்டு முகமது அசாருதீன் 426 அடித்திருந்தார் அதனை முறியடித்து விராட் கோலி சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் டிராவிட்டை நெருங்கி வருகிறார். இங்கிலாந்து மண்ணில் சுனில் கவாஸ்கர் 542 ரன்களும் ராகுல் டிராவிட் 602 ரன்களும் அடித்துள்ளனர். இந்த சாதனையை விராட் கோலி தகற்ப்பார் என்று விரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See