Connect with us

Cricket

டி.என்.பி.எல் 2018; கோப்பையை தட்டி தூக்கியது மதுரை பாந்தர்ஸ் !!

2018ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் மதுரை பாந்தர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த திண்டுக்கல் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு அருண் கார்த்திக் 71* ரன்களும், சந்திரன் 38* ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 17.1 ஓவரிலேயே மூன்று விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்த மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த வருடத்திற்கான சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See