Connect with us

Tennis

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அசத்தல்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி தற்போது மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது இன்று காலை ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, தற்போது கஜகஸ்தான் நாட்டின் ஆடவர் இரட்டையர் அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளது மேலும் இன்றைய நாள் இந்திய அணிக்கு ஒரு பொன் நாளாக அமைந்து வருகிறது.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See