Connect with us

Cricket

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்: ஆலன் டொனால்ட் சாதனையை முறியடித்தார் தங்கத்தமிழன் அஸ்வின்!

ராஜ்கோட் : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பாலோ-ஆன் ஆக அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

327 விக்கெட்டுக்கள்

இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 331 விக்கெட்டுக்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டெனால்டை முந்தியுள்ளார். ஆலன் டொனால்டு 72 டெஸ்டில் 330 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 24-வது இடத்தில் இருந்தார். அஸ்வின் தற்போது 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் அஸ்வின் தற்போது 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 333 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See