Connect with us

Asian Games

தங்கம் வென்ற முதல் வீராங்கணை: வரலாறு படைத்த வினேஷ் போகத்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற  முதல் இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார் மல்யுத்த வீராங்கணை வினேஷ் போகத். இதன் மூலம் இந்திய நாட்டிற்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என இந்திய வீராங்கனை வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

முதல் ரவுண்டில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. ஒட்டுமொத்தமாக 6-2 என வெற்றி பெற்றார். இந்த தங்கத்துடன் இந்தியா இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் வீராங்கனை இவராவார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See